ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக 6 நாட்களாக மூடப்பட்டிருந்த பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டவர் நிர்வாகத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சங்கங்களுடன் சனிக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டதாக அதை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பாரிஸ் முயற்சித்துள்ள நிலையில், மூன்று மாதங்களில் இது இரண்டாவது வேலைநிறுத்தம் ஆகும்.
கோபுரத்தை பார்வையிட டிக்கெட் வாங்கியவர்களிடம் கோபுரத்தின் இயக்க நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன், அதற்கான முன்பதிவுகளை திருப்பி தருவதாக கூறியுள்ளது.
ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக டிக்கெட் பெற்ற சுமார் 100,000 பேர் ஈபிள் கோபுரத்தை பார்வையிடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
14 ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணம் பூசப்படாமல் உள்ள நினைவுச் சின்னத்தின் நிலை குறித்தும், மற்ற சீரமைப்புப் பணிகள் தாமதமாகி வருவது குறித்தும் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.