விக்டோரியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயினால் 6 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 550 தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவசர சேவைகள் அமைச்சர் ஜாக்குலின் சைம்ஸ் தெரிவித்தார்.
இதுவரை, 228 தீ பாதிப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் ஆறு குடியிருப்பு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று சைம்ஸ் கூறினார்.
விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ காரணமாக அந்தப் பகுதி மக்கள் வீடுகளுக்குச் செல்வது இன்னமும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வெப்பமான காலநிலை தொடரும் என வானிலை திணைக்களம் முன்னறிவித்துள்ளதால் எதிர்வரும் வாரத்தில் காட்டுத் தீ பரவும் என நம்பப்படுகின்றது.
பேயின்தீனில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பல்லாரட் அருகே சுமார் 16,000 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது.
விக்டோரியாவில் 2020-க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ நிலை இதுவாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கவனமாக இருக்குமாறு பிரதமர் ஜெசிந்தா ஆலன் கேட்டுக்கொண்டுள்ளார்.