யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா தனியார் நிறுவனம் இலங்கைச் சந்தைக்கு பெற்றோலியப் பொருட்களை வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.
தமது நிறுவனத்துக்கும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த 22ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையில் தற்போது இயங்கி வரும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவுஸ்திரேலியா நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளதுடன் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களால் நிறுவப்பட உள்ளன.
இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா லிமிடெட் என்ற நிறுவனத்தையும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிபெட்கோவின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினரும் பெட்ரோலிய துறையில் புகழ்பெற்ற நிபுணருமான கலாநிதி பிரபாத் சமரசிங்க இதன் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யுனைடெட் பெட்ரோலியம் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய துணைக்கண்டம் முழுவதும் 500 பெட்ரோல் நிலையங்களைக் கொண்ட முன்னணி பெட்ரோலிய வர்த்தக நிறுவனமாகும்.
யுனைடெட் குழுமம் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் பல வணிகங்களைக் கொண்டுள்ளது, மேலும் நிறுவனம் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே தனது சில்லறை பெட்ரோலிய வணிகத்தை விரிவுபடுத்துவது இதுவே முதல் முறை.