Newsவிக்டோரியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம்

விக்டோரியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம்

-

விக்டோரியாவில் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில அரசும் கருத்து தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

விக்டோரியா மாகாணத்தின் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 6 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இந்த காட்டுத் தீயின் அபாயம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பர் மற்றும் ரெட்லான் நகரங்களைச் சுற்றியுள்ள வசிப்பவர்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை என்று மாநிலத்தின் அவசர சேவை அமைச்சர் ஜாக்குலின் சிம்ஸ் கூறுகிறார்.

ஊடகங்களிடம் பேசிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இது தொடர்பாக தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிதி மற்றும் பொருள் உதவிகளையும் வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அபாய வலயங்களுக்குச் செல்லவோ அல்லது அணுகவோ வேண்டாம் என பேரிடர் திணைக்களம் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வானிலை அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...