NewsOpenAI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்!

OpenAI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்!

-

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஒப்பந்த மீறல், நம்பிக்கைக்குரிய கடமையிலிருந்து நழுவுதல் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து இலாபத்தை அதிகரிக்க பாகுபாடான வணிக நடவடிக்கைகளில் ஓபன்ஏஐ ஈடுபட்டு வருவதாக எலான் வழக்கு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

OpenAI உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு மாறான பாதையில் தற்போது பயணிப்பதாக எலான், தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

OpenAI கடந்த ஆண்டு வெளியிட்ட சாட் ஜிபிடி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 3.5-வது வெர்சன் வரை பயனர்களுக்கு இலவச சேவையை அனுமதித்த OpenAI சாட் ஜிபிடி-4 வர்சனுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது.

இந்தியாவில் தற்போதைக்கு 1,650 பேர் கட்டணச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் பின்னணியில் மற்றுமொரு கதையும் குறிப்பிடப்படுகிறது. எலான் மஸ்க் OpenAI நிறுவனத்தை டெஸ்லாவுடன் இணைக்க முயன்றதாகவும் ஆல்ட்மேன் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகே ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...