Melbourneமெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

-

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பேர் தாக்கப்படுவதாக இரகசிய விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது ரயிலில் தாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மெல்போர்னில் உள்ள டிராம்களில் அல்லது அதற்கு அருகாமையில் தினமும் குறைந்தது ஒருவராவது தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மெல்போர்னில் உள்ள ரயில்கள் அல்லது நிலையங்களில் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் போக்குவரத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை என்றும், இதனை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்புகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விக்டோரியா மாநில பொது போக்குவரத்து அமைச்சர் கேப்ரியல் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிலிருந்து பொதுப் போக்குவரத்து தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டுமென வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news

சுற்றுலா தளமாக மாற்றவுள்ள ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு

குயின்ஸ்லாந்து மாநில அரசு, Great Barrier Reef அருகே அமைந்துள்ள ஒரு சிறிய தீவை சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, கெய்ர்ன்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள Double...

கைதிகளுக்கு தியானம் கற்றுத்தரும் ஆஸ்திரேலிய பெண்

நியூயார்க்கின் Rikers தீவில் உள்ள ஒரு ஆஸ்திரேலியப் பெண் ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி வருகிறார். முன்னாள் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Joh Jarvis, கைதிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும்...

Work from Home முறை மாற்றங்களுக்கு மன்னிப்பு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். ஆஸ்திரேலிய மக்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது...

Gold Coast வீட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனம்

கோல்ட் கோஸ்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...