18 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியப் பெண்களில் மூன்றில் ஒருவர் சட்டவிரோத போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியர்களிடையே மது அருந்துதல் மிகவும் பிரபலமாக உள்ளது, கடந்த 12 மாதங்களில் நான்கில் மூன்று ஆஸ்திரேலியர்கள் குடிப்பழக்கத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு 3 பேரில் 1 பேர் அளவுக்கு அதிகமாக மது அருந்துகிறார்கள், அது 31 சதவீதம்.
2007ல் மது அருந்தும் ஆண்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருந்தது, 2022ல் 39 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆண்கள் பொதுவாக சட்டவிரோத போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் பெண்களும் ஆண்களைப் போலவே சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று தற்போதைய தரவு காட்டுகிறது.
இதற்கிடையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், 14 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு முறை இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
அந்த வயதினரில் பாதி பேர் அந்த சிகரெட்டை முயற்சித்ததாக கூறப்படுகிறது.