காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்தி மெல்போர்னில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஒரு குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வாரமாக நீடித்த போராட்டம் இன்று மதியம் நடைபவனிக்கு பின் முடிவுக்கு வந்தது.
மாலை 4 மணியளவில் டிராம் தண்டவாளத்தின் நடுவே போராட்டக்காரர்கள் குழுவொன்று அமர்ந்திருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேரில் 30 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் மாலை 5 மணியளவில் ஃபிளிண்டர்ஸ் தெருவில் இருந்து புறப்பட்ட போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டம் தொடங்கிய பூங்காவை நோக்கி சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரவூர்தியைப் பயன்படுத்தி வீதியின் போக்குவரத்தைத் தடை செய்ததாகவும் இதனால் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, காரிலேயே பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்.
ஆம்புலன்ஸ் மூலம் அவர் குழந்தையுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.