பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் கடந்த ஆண்டு 58 ஆஸ்திரேலிய பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2023ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பது தொடர்பான 50,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியிடப்பட்ட போதும் வன்முறைச் செயல்கள் குறைவடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒயிட் ரிப்பன் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி மெலிசா பெர்ரி கூறுகையில், ஆஸ்திரேலிய ஆண்களுக்கு மீடியா கவரேஜ் என்பது மற்றொரு செய்தியாக இருக்கக்கூடாது.
ஆஸ்திரேலிய ஆண்களில் 86 சதவீதம் பேர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் தங்கள் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை உணர்ந்துள்ளனர்.
ஆனால் அதில் 63 சதவீதம் பேருக்கு அதில் எப்படி பங்களிப்பது என்பது பற்றிய புரிதல் இல்லை என்பது White Ribbon Foundation நடத்திய சர்வேயில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில், ஆண்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து 24 மணி நேரமும் தேசிய குடும்ப வன்முறை சேவையை 1800 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.