Newsஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் - குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

ஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் – குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

-

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரையும், சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வுஸ்திரேலியாவில் கணவர் குழந்தைகளுடன் வசித்து வந்த 36 வயதான Chaitanya Madhagani கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை உயிரிழந்த சைதன்யாவின் உடல் விக்டோரியாவின் Buckley பகுதியில் உள்ள Mount Pollock Road ஓர குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில் சைதன்ய மதகனியின் கணவர் தனது குழந்தையை அழைத்து கொண்டு இந்தியாவின் ஹைதராபாத்துக்கு திரும்பியதும், அங்கு சைதன்யாவின் பெற்றோர்களிடம் குழந்தைகளை விட்டு விட்டு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தின் Uppal பகுதி MLA Bandari Lakshma Reddy, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அத்துடன் சைதன்யாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாட்டிற்காக வெளியுறவு அமைச்சகத்திற்கு பெற்றோர் சார்பாக கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சைதன்யாவின் பெற்றோர் அளித்த தகவலின் படி, தங்கள் மகளை கொன்று விட்டதாக அவர்களது மருமகன் ஒப்புக்கொண்டதாக MLA தெரிவித்தார். ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது இந்த கொலை வழக்கை விசாரித்து வருகிறது.

பாயிண்ட் குக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது குற்றக் களமாக சந்தேகிக்கப்படுகிறது, அங்குதான் கொலை நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளியின் அடையாளம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், கணவரின் திடீர் இந்திய பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...