Open AI நிறுவனத்தின் காணொளி உருவாக்கும் செய்யறிவு செயலி இந்தாண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்துள்ளார்.
எழுத்து மூலமாக தருகிற உள்ளீட்டை விடியோவாக மாற்றக் கூடிய ‘Sora AI’ எனும் செயலியை Open AI நிறுவனம் அறிமுகப்படுத்தியதிலிருந்து அதன் மீதான ஆர்வம் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே உருவானது.
தற்போது, தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், இயக்குநர்களுக்கு மட்டுமே Sora பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா பேசும்போது, சோராவை இன்னும் மெருகேற்றி காணொளியுடன் ஓடியோவையும் தரும் வகையில் உருவாக்கவுள்ளோம். எதார்த்த அனுபவம் இதன் மூலம் கிடைக்கக் கூடும் எனத் தெரிவித்தார்.
அதே வேளையில் Open AI, தனியுரிமை மற்றும் நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதாகவும் பொது பிரபலங்கள் குறித்த காணொளிகளை உருவாக்காது என்றும் இதன் காணொளிகளில் அது AI உருவாக்கியது என்பதைக் காட்ட Watermark பதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நன்றி தமிழன்