SportsIPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

IPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

-

ஐ.பி.எல். 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகளைச் சேர்க்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் ஊட்டுவதற்காக இந்த புதிய இரண்டு விதிகளைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இம்பாட் வீரர் என்ற விதியை அறிமுகப்படுத்தியமைகுறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு சம்பியன் பட்டம் பெற்ற சி.எஸ்.கே. அணியும் ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் இன்று(22) மோதவுள்ளது

  1. ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்

பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்களை வீசலாம். முன்னதாக ஒரு பவுன்ஸர் மட்டுமே வீச வேண்டும். 2வது வீசப்படும் பவுன்ஸர் நோ பால் ஆக அறிவிக்கப்படும். இனிமேல் 3வது ஆக வீசப்படும் பவுன்ஸர் மட்டுமே நோ பால் ஆகும்.

பந்து வீச்சாளருக்கு இது கூடுதல் சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை சையத் முஷ்டாக் அலி கிண்ணத்தில் சோதனை அடிப்படையில் 2023-24 சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே இதனை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க பிசிசிஐ அனுமதியளித்துள்ளது.

  1. ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்

ஐபிஎல் சீசனில், ஆட்டத்தின்போதான கள முடிவுகளை நடுவா்கள் விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மைதானத்திலுள்ள 8 ‘ஹாக்-ஐ’ கேமராவின் காட்சிகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும். இதற்காக, அந்த ஒளிப்பதிவுகளை கையாளும் இரு நிபுணா்களும் தொலைக்காட்சி நடுவரின் உடனேயே இருப்பாா்கள். இதற்கு முன் இந்த இரு தரப்புக்கும் இடையே தொலைக்காட்சி ஒளிபரப்பு இயக்குநா் தொடா்பாளராக இருந்த நிலையில், இந்த முறை அவரின் தலையீடு இருக்காது. இதனால் முடிவுகளை துரிதமாக மேற்கொள்ளலாம்.

தொலைக்காட்சி நடுவா்களுக்கு இந்த முறை கூடுதல் காட்சிகளும், குறிப்பாக ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகளும் அளிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு களத்தடுப்பாளர் பவுண்டரி கோட்டை ஒட்டிய வகையில் பந்தை பிடிக்கும்போது, அவரது கைகள் பந்தை பிடிப்பது ஒரு பக்கமும், கால்கள் பவுண்டரி கோட்டை நெருங்கியிருப்பதை மறுபக்கமும் என ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகள் ஒரே நேரத்தில் காட்டும். இது தெளிவான முடிவை நடுவா் மேற்கொள்ள உதவும். ஓவா் த்ரோ போன்ற சூழ்நிலைகளிலும் இது உதவும்.வழக்கமாக மைதானம் முழுவதும் 8 அதிவேக ‘ஹாக்-ஐ’ கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

பொதுவாக அவை ‘பால் டிராக்கிங்’, ‘அல்ட்ரா எட்ஜ்’ ஆகியவற்றுக்காக மட்டுமே பிரதானமாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஸ்டம்ப்பிங், ரன் அவுட், கேட்ச், ஓவா்த்ரோ போன்ற சூழ்நிலைகளில், தொலைக்காட்சி நேரலைக்கான ஒளிப்பதிவின் காட்சிகளையே நடுவா் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை மேற்கூறிய அனைத்து சூழ்நிலைகளிலுமே ஹாக்-ஐ கேமரா பதிவுகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும்.

Latest news

2025-26 நிதியாண்டில் அழைத்து வரப்படும் நிரந்தர குடியேறிகள்

2025-26 நிதியாண்டில் 185,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் Tony Burke உறுதிப்படுத்தியுள்ளார். குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தப்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத்...

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலியா

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் ஆஸ்திரேலியா 5வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் குவாண்டாஸ் விமானமும், அமெரிக்காவின்...

World Surf League பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய Surfer Molly Picklum தனது முதல் உலக Surf League சாம்பியன்ஷிப்பை வென்றார். பிஜியின் Cloudbreak கடற்கரையில் நடைபெற்ற உலக Surf League இறுதிப் போட்டியில்...

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலியா

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் ஆஸ்திரேலியா 5வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் குவாண்டாஸ் விமானமும், அமெரிக்காவின்...