Sportsமுதல் வெற்றியை பதிவு செய்தது CSK - IPL 2024

முதல் வெற்றியை பதிவு செய்தது CSK – IPL 2024

-

2024 IPL தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.

அதிகபட்சமாக அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களும் விளாசினர். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் முஸ்தஃபிசூர் 4 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியில், தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 15 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்தார்.

ரஹானே 19 பந்துகளில் 27 ஓட்டங்களும், மிட்செல் 22 ஓட்டங்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா, தூபே சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இருவரின் மிரட்டலான ஆட்டத்தினால் CSK அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தூபே 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களும், ஜடேஜா 17 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 25 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

இதன்படி IPL 2024 சீசனின் முதல் வெற்றியை CSK அணி தனதாக்கியது.

Latest news

மது அருந்தினாலும் ஆரோக்கியமாக உள்ள  75% ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் ஆரோக்கியமான மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சிறந்த சுகாதார வழிகாட்டுதல்களுடன் உடற்பயிற்சி செய்தல், பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது மற்றும் மது அருந்துவது முதல்...

காசோலைகளின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தும் திட்டமிடும் மத்திய அரசு

2026 முதல் அத்தியாவசியப் பொருட்களுக்கான பணத்தை வணிகங்கள் ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. அதே நேரத்தில் காசோலைகளின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தும் திட்டத்தையும்...

$2.5 மில்லியன் லாட்டரி வென்ற வெற்றியாளரை தேடும் அதிகாரிகள்

லாட்டரி அதிகாரிகள் வார இறுதியில் வென்ற லோட்டோ லாட்டரியில் வென்ற $2.5 மில்லியன் சூப்பர் பரிசின் வெற்றியாளரைக் கண்டறியும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். மர்ம வெற்றியாளர் சனிக்கிழமை நடந்த...

விக்டோரியாவுக்கு கிடைத்த 2024 Miss Universe கிரீடம்

இந்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கிஜார் தெயில்விக் (Victoria Kjær Theilvig) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த போட்டியில் வெற்றி...

ஆசிய நாட்டில் சட்டவிரோத மதுபானம் அருந்திய மெல்பேர்ண் பெண்கள்

ஆசிய நாடொன்றில் சட்டவிரோத மதுபானத்தை அருந்திய இரண்டு மெல்பேர்ண் பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மெல்பேர்ணின் பேசைட் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த பட்டதாரிகள் லாவோஸில் இந்த...

விக்டோரியாவுக்கு கிடைத்த 2024 Miss Universe கிரீடம்

இந்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கிஜார் தெயில்விக் (Victoria Kjær Theilvig) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த போட்டியில் வெற்றி...