ரஷ்யாவின் மாஸ்கோவில் கச்சேரி அரங்கில் இனந்தெரியாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவிருந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் நான்கு ஆயுததாரிகள் ஈடுபட்டதாக ரஷ்ய பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் 6,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் இசை நிகழ்ச்சிக்காக கச்சேரி வளாகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்துள்ளதுடன், மேற்கூரையின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.
காயமடைந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும், இது தீவிரவாத தாக்குதல் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்தப்படாத அறிக்கையின்படி, தாக்குதலுக்குப் பின்னணியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழு இருப்பதாகக் கூறியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க தூதரகம் ரஷ்யாவில் உள்ள அதன் குடிமக்களை எச்சரித்தது, ஏனெனில் தீவிரவாதிகள் மாஸ்கோவில் பெரிய கூட்டங்களை குறிவைக்க உடனடி திட்டங்களைக் கொண்டிருந்தனர்.