Sportsபோராடித் தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத் - IPL 2024

போராடித் தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத் – IPL 2024

-

17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின.

இதில், நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரசல் 64 ஓட்டங்களையும், சால்ட் 54 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதையடுத்து, 209 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதரபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங் அகர்வால், அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அகர்வால் 32 ஓட்டங்களையும், அபிஷேக் 32 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த திரிபாதி 20 ஓட்டங்களுடனும், மார்க்ரம் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஆனால், அதிரடியாக ஆடிய கிளாசன் அரைசதம் விளாசினார். அப்துல் சமத் 15 ஓட்டங்களை எடுத்தார்.

63 ஓட்டங்களை குவித்த கிளாசன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். வெற்றிபெற கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஐதராபாத் அணி ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...