Sports6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது குஜராத் - IPL 2024

6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது குஜராத் – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரின் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 168 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் 0 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து வந்த நமன் அதிரடியாக விளையாடி 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித்- ப்ரீவிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 43 ஓட்டங்களுடனும் ப்ரீவிஸ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, ஜெரால்ட் கோட்ஸி 1 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை பாண்ட்யா சிக்சருக்கும் 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் ஓமர்சாய், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை தோல்வியடைவது தொடர்கிறது.

Latest news

பீட்டர் டட்டன் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் – அலி பிரான்சின் அறிக்கை

தனது இடத்தை வென்ற தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலி பிரான்ஸ், லிபரல் கூட்டணித் தலைவர் பீட்டர் டட்டன் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்...

ஓய்வு பெற்றவர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Work Bonus முறை

ஓய்வூதியம் கோருபவர்களுக்கு Work Bonus திட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. அதன்படி, அவர்கள் மொத்தமாக $4,000 பெற முடியும். Work Bonus என்பது, Centrelink கொடுப்பனவுகளைக் குறைக்காமல்...

எதிர்காலத்தில் பணவீக்கக் குறைப்பு எவ்வாறு நிகழும் என்பதை விளக்கும் நிபுணர்

அடுத்த சில மாதங்களில் NAB பல வட்டி விகிதக் குறைப்புகளைத் திட்டமிட்டுள்ளது. இது வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் உள்ளது. Big 4 இன் தலைமைப் பொருளாதார...

மூன்று நாட்களுக்கு விளக்குகளை அணைக்கப்போகும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான விடுமுறை தீவுக்குச் செல்லும் பாலத்தின் ஓரத்தில் உள்ள விளக்குகள் மூன்று நாட்களாக அணைந்து போயுள்ளன. புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்கவே இந்த...

Online Dating வலைத்தளங்களைப் பார்வையிடுபவர்களுக்கு எச்சரிக்கை

Online Dating வலைத்தளங்களில் மோசடி செய்பவர்கள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய தேசிய மோசடி எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், ஆஸ்திரேலியர்கள் இதுபோன்ற மோசடியால்...

பல் மருத்துவ சேவைகளை மருத்துவ காப்பீட்டில் சேர்க்க வேண்டுமா?

பல் மருத்துவ சேவைகளை உள்ளடக்கியதாக Medicare-ஐ மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய பல் மருத்துவ நிபுணர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவைப்...