Newsகட்டாய கோவிட் தடுப்பூசி சட்டங்கள் விரைவில் நீக்கப்படுமா?

கட்டாய கோவிட் தடுப்பூசி சட்டங்கள் விரைவில் நீக்கப்படுமா?

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள சுகாதார அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் தடுப்பூசியைப் பெறுவதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை நீக்கத் தயாராகி வருகின்றனர்.

இதன்படி, எதிர்வரும் வாரங்களில் சட்டம் நீக்கப்படும் மற்றும் உத்தேச மாற்றம் குறித்து சுகாதார ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

மாநில சுகாதார அமைச்சர் ரியான் பார்க், இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடரும் என்றும், சட்டத்தை நீக்குவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

கோவிட் அபாயம் இன்னும் உள்ளது என்றாலும், நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சுகாதாரப் பணியாளர்கள் உட்பட அனைவரும் தங்களது கோவிட்-19 தடுப்பூசி திட்டங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

இதனால், கட்டாய தடுப்பூசி சட்டத்தால் வேலை இழந்தவர்கள் அல்லது சுகாதாரப் பதவிகளை விட்டு வெளியேறியவர்கள் புதிய வேலைகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...