Sportsதன் முதல் வெற்றியை பதிவு செய்தது RCB - IPL 2024

தன் முதல் வெற்றியை பதிவு செய்தது RCB – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 6-லீக் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக தவான் 45 ஓட்டங்களை எடுத்தார். மேலும் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷாங்க் சிங்கால் இந்த ஓட்டங்களை பஞ்சாப் அணி எடுக்க முடிந்தது. RCB அணி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து RCB அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். டுபிளிசிஸ் 3, க்ரீன் 3, பட்டிதார் 18, மேக்ஸ்வெல் 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆர்சிபி. இதனையடுத்து விராட் கோலி – அனுஜ் ராவத் ஜோடி சேர்ந்து ஓட்டங்களை குவித்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரை சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை ஹர்சல் ஆட்டமிழக்கச் செய்தார். அந்த ஓவரில் 2 பவுண்டரி விளாசிய நிலையில் கடைசி பந்தில் கோலி (77) விக்கெட்டை வீழ்த்தினார். அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் அனுஜ் ராவத் 11 ஓட்டங்களுடன்‌ வெளியேறினார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் லாம்ரோர் வெற்றிக்காக போராடினார். இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது RCB அணிக்கு முதல் வெற்றி ஆகும். பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வி ஆகும்.

நன்றி தமிழன்

Latest news

iPhone 17 என்னென்ன வண்ணங்களில் வெளியாகிறது?

iPhone 17 தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதன் வண்ணங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. முந்தைய ஆண்டுகளைப் போலவே, ஆப்பிள்...

டெஸ்லாவை மிஞ்ச கடுமையாக முயற்சிக்கும் BYD

ஆஸ்திரேலியாவின் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லா கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவின் சிறந்த மின்சார பிராண்டாக மாறுவதற்கான மிகப்பெரிய பிரச்சாரத்தில் BYD ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும்,...

ஒரு நோய்க்கு பயன்படுத்தப்படும் தூண்டுதலின் ஆரோக்கிய ஆபத்து

ஆஸ்திரேலிய மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் முதுகுத் தண்டு தூண்டுதல்களின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் நாள்பட்ட...

குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களின் போது போலீசார் மீது ஏவுகணை தாக்குதல்கள்

இங்கிலாந்தில் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டல் முன், போராட்டக்காரர்கள் குழு ஒன்று காவல்துறையினரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, அதில்...