வடக்கு காசா பகுதியில் பெய்ட் லாஹியா அருகே கடலில் விழுந்த உதவிப் பொட்டலங்களை மீட்க முயன்ற 12 பாலஸ்தீனியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உதவிக்காக விரைவதையும், சிலர் கடலில் விழுந்த பார்சல்களை மீட்டெடுக்க முயற்சிப்பதையும் வான்வழி காட்சிகள் காட்டுகிறது.
கடும் பட்டினியால் தவித்து நீச்சல் அடிக்க அல்லது உதவிப் பொட்டலங்களைப் பெறச் சென்ற இனந்தெரியாத குழுவொன்று விபத்தில் சிக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், காசா நகரின் மேற்கில் உள்ள அல்-ஷாதி முகாமில் விமான உதவிப் பொதி விழுந்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
காசா பகுதிக்கு நுழைவதற்கு இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் அத்தியாவசியப் பொருட்களை சீர்குலைத்து 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் அபாயத்தில் இருப்பதாக ஐநா அறிக்கைகள் காட்டுகின்றன.