IPL தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.
ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென் ஆகியோரின் அரைசதத்தால் இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களை குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 80 ஓட்டங்கள், அபிஷேக் சர்மா 63 ஓட்டங்கள், ஹெட் 62 ஓட்டங்கள் எடுத்தனர்.
இதையடுத்து 278 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் -இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இதனால் 3 ஓவரில் மும்பை 50 ஓட்டங்களை கடந்தது.
அதிரடியாக விளையாடி இஷான் 34 ஓட்டங்களிலும் ரோகித் 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நமன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். 14 பந்தில் 30 ஓட்டங்கள் குவித்த நமன் ஆட்டமிழக்க. அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
மந்தமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். இறுதி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட்- டிம் டேவிட் முடிந்த அளவுக்கு வெற்றிக்கு போராடினர். இறுதியில் ஐதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நன்றி தமிழன்