Sports7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது KKR - IPL 2024

7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது KKR – IPL 2024

-

IPL 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தார். இவருடன் ஆரம்ப வீரராக களமிறங்கிய அணி தலைவர் போப் டு பிளெசிஸ் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து 183 ஓட்டங்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு, பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 30 மற்றும் 47 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் அய்யர் 30 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயஸ் அய்யர் 24 பந்துகளில் 39 ஓட்டங்களை குவிக்க கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ஓட்டங்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் வைசாக், யாஷ் தயால் மற்றும் மயான்க் டாகர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் கொல்கத்தா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி இன்றி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றிருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...