Sportsதன் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ - IPL 2024

தன் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.இதில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக குயின்டன் டி கொக் , கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த படிக்கல் 9 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுபுறம் டி கொக் சிறப்பாக நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்த அவர் அரைசதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் , குருனால் பாண்டியா இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.

இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ஓட்டங்களும், குருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர் . பஞ்சாப் அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டும் , அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். தவான் – பேர்ஸ்டோ இருவரும் இணைந்து 102 ஓட்டங்களை பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பேர்ஸ்டோ 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் பிரப்சிம்ரன் சிங் 19 ஓட்டங்களுடனும், ஜித்தேஷ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தவான் போராடினார். ஆனால் மற்ற வீரர்களில் யாரும் அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களை மட்டுமே அடித்தது. இதன் மூலம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ 2-வது போட்டியில் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ஓட்டங்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...