தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பார்வையாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்த மூவரில் ஒரு ஆஸ்திரேலியரும் அடங்குவதாக ஐ.நா அமைதிப்படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்ததாக லெபனான் கூறுகிறது, இஸ்ரேலிய இராணுவம் அதை மறுத்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐநா ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு லெபனானின் தற்காலிக பிரதமர் நஜிப் மிகாடியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதலில் அவுஸ்திரேலியா, சிலி மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவரும், லெபனான் மொழிபெயர்ப்பாளரும் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.