Sportsசென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி - IPL...

சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி – IPL 2024

-

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31 நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ஓட்டங்களை குவித்தனர். அடுத்த வந்த அணித் தலைவர் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்து வந்தார். இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ஓட்டங்களிலும், ஸ்டப்ஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பண்ட் 51 ஓட்டங்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து 192 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னை அணியின் ஆரம்ப வீரர்கள் அணித் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா முறையே 1 மற்றும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்பாக ஆடி ஓட்டங்களை சேர்த்தது. இருவரும் முறையே 45 மற்றும் 34 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சமீர் ரிஸ்வி முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். பிறகு ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த எம்.எஸ். டோனி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். இந்த ஜோடி அதிரடி ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டது.

போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ஓட்டங்களுடனும், ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி முதல் வெற்றியை ருசித்தது.

நன்றி தமிழன்

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...