Newsகோல்ட் கோஸ்டில் போதையில் இறந்த பெண் குறித்து வெளியான தகவல்

கோல்ட் கோஸ்டில் போதையில் இறந்த பெண் குறித்து வெளியான தகவல்

-

அண்மையில் கோல்ட் கோஸ்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழந்த பெண்ணுக்கு 40வது பிறந்தநாளை கொண்டாடும் போது வலிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆறு நெருங்கிய நண்பர்களுடன் சர்ஃபர்ஸ் பாரடைஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய 40 வயதுடைய பெண்ணின் அடையாளத்தை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அங்கு சில பெண்கள் பல்வேறு போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இரவு 11 மணியளவில் பல மருந்துகளை அதிகமாக உட்கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர்.

பிறந்தநாளைக் கொண்டாடிய பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவர்களின் முயற்சி பலனளிக்காமல் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு 43 வயது பெண் ஆபத்தான நிலையில் கோல்ட் கோஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெண்களின் அதிகாரமளித்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல உரையாடல்களில் ஈடுபட்டு வந்த பெண் எனவும், அதற்காக அர்ப்பணிப்புடன் பிரச்சாரத்தையும் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த Tattoo குத்தும் கலைஞர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர்...

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராட்டங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆஸ்திரேலிய நகரங்களில் "What Were You Wearing?" என்ற அமைப்பு ஏராளமான போராட்டங்களை நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அனைத்து...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...