துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இஸ்தான்புல்லில் உள்ள 16 மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள கிளப்பில் நள்ளிரவுக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டதாக இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்துள்ளார்.
இது மூடப்பட்டு பகலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தீயில் சிக்கி இறந்தவர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்து தொடர்பாக மூன்று பணியிட அதிகாரிகள், இரவு விடுதி மேலாளர் மற்றும் புனரமைப்பு மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்தான்புல் மேயர் சமூக ஊடகங்களில் தனது இரங்கலைத் தெரிவித்தார், மேலும் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனும் உள்துறை அமைச்சரிடம் சம்பவம் குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது.