SportsRCB-யை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ - IPL 2024

RCB-யை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ – IPL 2024

-

IPL தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை சேர்த்தது. அதிகபட்சமாக டிகாக் 81 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். RCB அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டோப்லி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து RCB அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – டுபிளிசிஸ் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஆடிய டுபிளிசிஸ் 1 ஓட்டத்திற்கு ஆசைபட்டு தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்டில் வெளியேறினார்.

அடுத்து வந்த க்ரீன் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடி லோம்ரோர் ஆர்.சி.பி வெற்றிக்காக போராடினார். அவர் 13 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆர்சிபி அணியின் தோல்வி உறுதியானது.

இறுதியில் RCB அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை சேர்த்தது. இதனால் லக்னோ அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை அள்ளினார். இது RCB அணிக்கு 3-வது தோல்வியாகும். இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றி ஆகும்.

Latest news

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...