கிழக்கு கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதியை கனமழை பாதிக்கும், தெற்கு குயின்ஸ்லாந்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸின் தெற்கு கடற்கரை வரை வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை முதல் சனிக்கிழமை காலை வரை சிட்னி மற்றும் புறநகர் பகுதிகளில் 200மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, நேபியன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதுடன், பிரிஸ்பேன் மற்றும் கான்பெராவை அண்மித்த பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நள்ளிரவில், நியூ சவுத் வேல்ஸின் வடக்கு ஆறுகள் உட்பட, பிளாக்பூலில் இருந்து பிரிஸ்பேன் வரை 100மிமீ வரை மழை பெய்யக்கூடும்.
அவுஸ்திரேலியாவிற்கு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியமையே இந்த காலநிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.