Sports6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ஐதராபாத் - IPL 2024

6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ஐதராபாத் – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரின் 18-வது லீக் போட்டியில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சி.எஸ்.கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ஓட்டங்களை எடுத்தார்.

இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா – ஹெட் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தார். இவரை தீபக் சாஹர் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் ஹெட் ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.

ஹெட் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய மார்க்ரம் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனையடுத்து கிளாசன் மற்றும் நிதிஷ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சி.எஸ்.கே தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டும் தீபக் சாஹர் தீக்ஷன தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...