டெல் அவிவ் உட்பட பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் காசா பகுதியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் கோரி போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் 100,000 பேர் இணைந்துள்ளதாகவும் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் கோருவதாகவும் கூறுகின்றனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் பிணைக் கைதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து டெல் அவிவ் மற்றும் பிற நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்கள் ஆரம்பமாகி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்தப் போராட்டங்களில் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் உள்ள சுமார் 130 பணயக்கைதிகளை விடுவிக்க அரசாங்கத்தால் இயலாமை குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
காஸாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க தவறியதால் பிரதமர் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.