Sports6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது ராஜஸ்தான் - IPL 2024

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது ராஜஸ்தான் – IPL 2024

-

IPL தொடரில் நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதின. அதில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணிக்கு ஆரம்ப வீரர்களாக விராட் கோலி மற்றும் போப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ஓட்டங்களை சேர்த்தனர். அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடினர். இதனால் அணியின் ஸ்கோர் சற்று மெதுவாகவே உயர்ந்தது. போகப்போக அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். நடப்பு சீசனில் முதல் முறையாக 100 ஓட்டங்களைக் கடந்த இவர்களது பார்ட்னர்ஷிப் 125 ஓட்டங்களில் பிரிந்தது.

டு பிளிஸ்சிஸ் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி நடப்பு ஐ.பி.எல். தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாது நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதமாகவும் இது பதிவானது.

பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 184 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு ஜோஸ் பட்லருடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

பின்னர் இந்த ஜோடியில் அணி தலைவர் சஞ்சு சாம்சன் 69 (42) ஓட்டங்களில் பிடிகொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 4 ஓட்டங்களிலும், துருவ் ஜூரெல் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 4 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களும், ஹெட்மயர் 11 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 19.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் டாப்லி 2 விக்கெட்டுகளும், யாஸ் தயாள் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...