Sportsகுஜராத்தை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ - IPL 2024

குஜராத்தை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டி கொக் 6 ஓட்டங்களுடனும் அடுத்ததாக களமிறங்கிய படிக்கல் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் அணித் தலைவர் கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் நிதானமாக விளையாடி அணிக்கு ஓட்டங்களை சேர்த்தனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது.

இவர்களில் கே.எல். ராகுல் 33 ஓட்டங்களுடனும், ஸ்டோய்னிஸ் 58 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் பூரன் அதிரடியாக விளையாடி அணி சிறந்த நிலையை எட்ட உதவினார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக நல்கண்டே மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 164 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் சாய் சுதர்ஷன் மற்றும் அணித் தலைவர் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக ஆடத் தொடங்கிய இந்த ஜோடியில் சுப்மன் கில் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 1 ஓட்டங்களுடன் வெளியேற, மறுமுனையில் ஓட்டங்களை சேர்க்க போராடிய சாய் சுதர்ஷன் 31 ஓட்டங்களுடனும், ஷரத் 2 ஓட்டங்களுடனும், தர்ஷன் நல்கண்டே 12 ஓட்டங்களுடனும், விஜய் சங்கர் 17 ஓட்டங்களுடனும், ரஷித் கான் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும், உமேஷ் யாதவ் 2 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் இறுதிவரை போராடிய ராகுல் தேவாட்டியா 30 ஓட்டங்களுடனும், நூர் அகமது 4 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இறுதியில் குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

லக்னோ அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும் ரவி பிஷ்னோய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

உலகின் முதல் 6G சிப்பை தயாரித்தது சீனா

சீன ஆராய்ச்சியாளர்கள் குழு உலகின் முதல் 6G சிப்பை அறிமுகப்படுத்த முடிந்தது. தற்போதைய இணைய சேவையுடன் ஒப்பிடும்போது இது 5000 மடங்கு வேகத்தை அதிகரிக்க முடியும் என்று...

Pepper Spray வீட்டு வன்முறையை மேலும் மோசமாக்குமா?

மக்கள் Pepper Spray-ஐ பயன்படுத்த அனுமதிப்பது வீட்டு வன்முறைக்கான மற்றொரு கருவியாக மாறும் என்ற கவலைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், மக்கள் தற்காப்புக்காக Pepper Spray-ஐ...

ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபலமான ஆடை பிராண்டால் செய்யப்பட்ட விசித்திர விளம்பரம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஆடை பிராண்டான Nala, ஒரு அற்புதமான சுவரோவியத்துடன் அதன் விளம்பர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் மெல்பேர்ணின் Abbotsford-இற்கு முன்னால் ஒரு பெரிய சுவரோவியமாக...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் டெஸ்லாவின் “Fully Self-Driving” தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவில் சுய-ஓட்டுநர் தொழில்நுட்பத்தை (Fully Self-Driving - FSD) செயல்படுத்தப்போவதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இந்த அதிநவீன மென்பொருள், ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஸ்டீயரிங் சக்கரத்தைத்...

ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபலமான ஆடை பிராண்டால் செய்யப்பட்ட விசித்திர விளம்பரம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஆடை பிராண்டான Nala, ஒரு அற்புதமான சுவரோவியத்துடன் அதன் விளம்பர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் மெல்பேர்ணின் Abbotsford-இற்கு முன்னால் ஒரு பெரிய சுவரோவியமாக...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் டெஸ்லாவின் “Fully Self-Driving” தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவில் சுய-ஓட்டுநர் தொழில்நுட்பத்தை (Fully Self-Driving - FSD) செயல்படுத்தப்போவதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இந்த அதிநவீன மென்பொருள், ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஸ்டீயரிங் சக்கரத்தைத்...