சிட்னியில் உள்ள பெண்களுக்கான ராயல் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு, மாற்று கருப்பையில் இருந்து குழந்தையை வெற்றிகரமாக பிரசவித்துள்ளது.
அதன்படி, ஹென்றி பிரையன்ட் என்ற சிறு குழந்தை ஆஸ்திரேலியாவில் மாற்று வயிற்றில் இருந்து பிறந்த முதல் குழந்தையாக வரலாறு படைத்துள்ளது.
இந்த பிரசவத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அவரது 55 வயதான தாய் தனது கர்ப்பப்பையை தானமாக வழங்கியுள்ளார்.
அண்மையில் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளதுடன், குழந்தையின் தாய்க்கு 33 வயது.
இது தனது சொந்தக் குழந்தையைப் பெற்றெடுப்பதைப் போன்ற உணர்வு இருப்பதாக கருப்பை தானம் செய்த பாட்டி குறிப்பிட்டுள்ளார்.
33 வயதான பெண்ணின் கருப்பை, உயிர் காக்கும் அடிப்படையில் கருப்பை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மகளின் முதல் குழந்தை பிறந்ததையடுத்து அவரது தாயாரால் கருப்பை தானம் செய்யப்பட்டது.
கர்ப்பப்பை இல்லாமல் பிறந்த அல்லது அகற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்ததாக இந்த அற்புதமான அறுவை சிகிச்சை சோதனை கூறப்படுகிறது.