Newsஉலகமே பார்வையிட்ட அரியவகை சூரிய கிரகணம்!

உலகமே பார்வையிட்ட அரியவகை சூரிய கிரகணம்!

-

இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் 8ம் திகதி வட அமெரிக்கா முழுவதும் இடம்பெற்ற நிலையில் இது ஒரு அரிதான சூரிய கிரகணமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் சுமார் 7 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடிக்கும் இந்த சூரிய கிரகணத்தை போல் இன்னொரு சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை பசிபிக் பகுதியில் மீண்டும் இடம்பெற வாய்ப்பில்லை என்பதனால் இது சிறப்பான சூரிய கிரகணமாக பார்க்கப்படுகிறது.

அதன்படி இந்த அரிய சூரிய கிரகணத்தை மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் உள்ள நாடுகளில் காண முடிந்தது.

தவிரவும் சூரிய கிரகணத்தின்போது, சந்திரனின் நிழலானது நியூயோர்க் மாநிலம் முழுவதும் மணிக்கு சராசரியாக 2,300 மைல் வேகத்தில் பயணித்தது என்றும் மாநிலத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் செல்வதற்கு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்தது என்று ரோசெஸ்டர் மியூசியம் & அறிவியல் மையத்தின் கிரகண கூட்டாண்மை ஒருங்கிணைப்பாளர் டான் ஷ்னீடர்மான் கூறியுள்ளார்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 223,000 மைல்கள் தொலைவில், பூமிக்கு அருகாமையில் காணப்படுவதால் சந்திரன் வானில் சற்று பெரியதாக தோன்றும். இதன் விளைவாக சூரிய கிரகணத்தின் இருள் நீண்ட காலத்திற்கு இருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் 1973 ஆம் ஆண்டு ஆபிரிக்காவில் ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடித்த கிரகணத்தை உலகம் கண்டது இதற்கு பின்னர் பசுபிக் பகுதியில் 2150 ஆண்டு வரை இவ்வாறு ஒரு கிரகணம் மீண்டும் நடக்காது என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...