சிட்னி உட்பட நியூ சவுத் வேல்ஸின் பல பகுதிகளுக்கு ஆபத்தான காற்று ஓட்டம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய கனமழைக்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் இன்று பலத்த காற்று வீசும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மன் கடலை அண்மித்த பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று, சிட்னி மற்றும் காஃப்ஸ் துறைமுகத்திற்கு இடைப்பட்ட கடற்கரையின் சில பகுதிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரதேசங்களில் கரையை அண்மித்த பகுதியில் அலைகள் அபாயகரமானதாகக் காணப்படுவதால், மக்கள் அலைகள் தாக்கப்படும் பிரதேசங்களிலிருந்து விலகி இருக்குமாறு பணியகம் குறிப்பிட்டுள்ளது.