Sportsராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி திரில் வெற்றி - IPL 2024

ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி திரில் வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல்., தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.

இதில் நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணியின் தலைவர் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இதில் ஜெய்ஸ்வால் 24 ஓட்டங்களிலும், முந்தைய போட்டியின்‌ ஹீரோ பட்லர் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் – ரியான் பராக் இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதிரடியாகவும் அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் 3-வது அரை சதத்தை பூர்த்தி செய்த ரியான் பராக் 76 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹெட்மேயர், தனது பங்குக்கு 13 ஓட்டங்கள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களை குவித்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 68 ஓட்டங்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், ரஷித் கான், மொகித் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து 197 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கில் , சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 64 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் சாய் சுதர்சன் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மேத்யூ வேட் 4 ஓட்டங்கள், அபினவ் மனோகர் 1 ஓட்டம் , விஜய் ஷங்கர் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் கில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 44 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ராகுல் திவேட்டியா , ரஷீத் கான் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் அவேஷ் கான் வீசினார்.

இதில் அதிரடியை காட்டிய ரஷீத் கான் 3 பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அவர் 11 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார் குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Latest news

விக்டோரியாவில் தூக்கத்திலிருந்து எழுந்து கணவனைக் கொன்ற மனைவி

விக்டோரியாவில் உள்ள பொது வழக்குரைஞர் சேவை, கொலைக் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதால் இக்கட்டான சூழ்நிலைக்கு விடப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு 2023...

பணவீக்க விகிதம் குறித்து ஜிம் சால்மர்ஸின் கணிப்பு

ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சார்மஸ் இன்று மக்களுக்கு சில நம்பிக்கையை அளித்துள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் ரொக்க விகிதம் இது நான்கு மடங்கு வரை குறையும்...

டட்டனின் வெளிநாட்டு மாணவர் குறைப்புகளை விமர்சிக்கும் கல்வித் துறை

சர்வதேச மாணவர் சேர்க்கையை 25 சதவீதமாகக் கட்டுப்படுத்தும் கூட்டணியின் திட்டம் சர்வதேச கல்வித் துறையில் விமர்சனங்களை ஈர்த்துள்ளது. ஆஸ்திரேலிய பல்கலைக்கழக படிப்புகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் சதவீதம்...

சுற்றுலா தளமாக மாற்றவுள்ள ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு

குயின்ஸ்லாந்து மாநில அரசு, Great Barrier Reef அருகே அமைந்துள்ள ஒரு சிறிய தீவை சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, கெய்ர்ன்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள Double...

சுற்றுலா தளமாக மாற்றவுள்ள ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு

குயின்ஸ்லாந்து மாநில அரசு, Great Barrier Reef அருகே அமைந்துள்ள ஒரு சிறிய தீவை சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, கெய்ர்ன்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள Double...

மெல்பேர்ணில் திடீரென குறைந்த வெப்பநிலை

2025 ஆம் ஆண்டில் மெல்பேர்ணில் மிகவும் குளிரான காலை நேற்று (07) காலை பதிவாகியுள்ளது. அதன்படி, நேற்று காலை 7.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில்,...