Newsமத்திய கிழக்கில் போர் பதற்றத்தால் விமான சேவைகளுக்கான இரத்து

மத்திய கிழக்கில் போர் பதற்றத்தால் விமான சேவைகளுக்கான இரத்து

-

ஜெர்மனிய விமான சேவை நிறுவனமான லுப்தான்சா, ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கான விமான சேவையை எதிர்வரும் சனிக்கிழமை வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற சூழலால் இந்த முடிவை எடுத்ததாக லுப்தான்சா தெரிவித்துள்ளது.ஜெர்மனின் பிராங்க்போர்ட் நகரில் இருந்து தெஹ்ரானுக்கு வாரத்திற்கு 5 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக வியாழக்கிழமை வரை அறிவிக்கப்பட்டிருந்த விமான சேவை இரத்து, தற்போது சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

லுப்தான்சாவின் துணை விமான நிறுவனமான ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் தெஹ்ரானுக்கு விமான சேவை தொடர்கிறது. வியன்னாவில் இருந்து தெஹ்ரான் குறுகிய நேரம் என்பதாலும் பகல் பொழுதில் விமானங்கள் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல், ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதும் அதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த போவதாக தெரிவித்ததும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Latest news

விக்டோரியர்களுக்கு வசதியான சுகாதார சேவைகளுக்கான திட்டங்கள்

விக்டோரியா மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, Community Health First  அரசாங்கத்திற்கு $75 மில்லியன் முதலீட்டை முன்மொழிந்துள்ளது . பொதுமக்களுக்கு மலிவு விலையில் அதிக மதிப்பு...

Work From Home-ஐ சட்டப்பூர்வமாக்க விக்டோரியன் அரசு தயார்

விக்டோரியா மாநில அரசு புதிய சட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வமாக்க தயாராகி வருவதாக பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார் . அதன்படி, விக்டோரியாவில்...

லொஸ் ஏஞ்சல்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து

அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான கலிபோர்னியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள செவ்ரான் எல் செகுண்டோ சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா ஆளுநரின்...

மெல்பேர்ணில் நீரில் மூழ்கக்கூடிய பகுதிகளைக் காட்டும் புதிய வரைபடம்

மெல்பேர்ணின் உள் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள், வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மெல்பேர்ண் வாட்டர் இன்று வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட வெள்ள வரைபடம், நூறு...

வெளிநாட்டு தலையீடு இல்லாமல் நாட்டைப் பாதுகாப்போம் – அரசாங்கம்

ஆஸ்திரேலியாவை பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறது. நமது நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தேசிய நலன்களுக்கு வெளிநாட்டு தலையீட்டால் ஏற்படும் அச்சுறுத்தல்கள்...

ஆஸ்திரேலியாவைத் தாக்க இருக்கும் புயல்களுக்கான கவர்ச்சிகரமான பெயர் பட்டியல்

ஆஸ்திரேலியாவின் அடுத்த வெப்பமண்டல புயல்களுக்கான புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நவம்பர் முதல் ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் புயல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக...