Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் பங மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.

அதில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடாப்பெடுத்தாட

களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 3 ஓட்டங்களிலும், அடுத்ததாக களமிரங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த படிதார் – டு பிளிஸ்சிஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை முன்னெடுத்து சென்றனர். படிதார் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதமடித்த டு பிளிஸ்சிஸ் 61 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி 23 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 197 ஓட்டங்கள் இலக்குடன் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடியில் இஷான் கிஷன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில் 34 பந்துகளில் 5 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் எடுத்திருந்தநிலையில் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்ததாக ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 38 (24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யகுமாருடன், அணித் தலைவர் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 19 பந்துகளில் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் .

அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் ஹர்திக் பாண்ட்யா 21 (6) ஓட்டங்களும், திலக் வர்மா 16 (10) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூரு அணியின் சார்பில் ஆகாஷ் தீப், வைஷாக் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

Latest news

உலகின் பில்லியனர்கள் சங்கத்தில் இணைந்தார் ஷாருக்கான்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இணைந்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் ஷாருக்கானின் செல்வம் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (£1.03 பில்லியன்) என...

AI-யால் கோடீஸ்வரர்களான சகோதரர்கள்

சிட்னியை தளமாகக் கொண்ட கணினி நிறுவனமான Iren, AI-குறிப்பிட்ட கணினி சேவையகங்களை வாடகைக்கு எடுத்ததன் மூலம் அதன் மதிப்பை $19 பில்லியனாக உயர்த்தியுள்ளது. Iren என்று அழைக்கப்படும்...

மெல்பேர்ண் ரயில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

தடம் புரண்ட மெல்பேர்ண் ரயில், சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்களில் இயங்கி வந்ததாக முதற்கட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. ஜூலை மாதம் மெல்பேர்ணின் Clifton Hill நிலையத்தை நெருங்கும்...

டிரம்பிற்கு பயந்து பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதி முன்மொழிவின்படி, உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் 72 மணி...

நீண்ட விடுமுறை நாட்களில் பல்பொருள் அங்காடி திறக்கும் நேரம்

இந்த வார இறுதியில் பொது விடுமுறை நாட்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு முக்கிய பல்பொருள் அங்காடிகளின் மூடல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, NSW, ACT மற்றும்...

கனடாவில் திரையரங்குகளுக்கு தீ வைத்து இந்திய திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு

கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் காந்தாரா chapter - 1 உள்ளிட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக...