Sports6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி

-

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய லக்னோ அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி கோக் மற்றும் அணித் தலைவர் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ஓட்டங்களுடனும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ஓட்டங்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ஓட்டங்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ஓட்டங்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அணித் தலைவர் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Latest news

விக்டோரியர்களுக்கு வசதியான சுகாதார சேவைகளுக்கான திட்டங்கள்

விக்டோரியா மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, Community Health First  அரசாங்கத்திற்கு $75 மில்லியன் முதலீட்டை முன்மொழிந்துள்ளது . பொதுமக்களுக்கு மலிவு விலையில் அதிக மதிப்பு...

Work From Home-ஐ சட்டப்பூர்வமாக்க விக்டோரியன் அரசு தயார்

விக்டோரியா மாநில அரசு புதிய சட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வமாக்க தயாராகி வருவதாக பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார் . அதன்படி, விக்டோரியாவில்...

லொஸ் ஏஞ்சல்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து

அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான கலிபோர்னியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள செவ்ரான் எல் செகுண்டோ சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா ஆளுநரின்...

மெல்பேர்ணில் நீரில் மூழ்கக்கூடிய பகுதிகளைக் காட்டும் புதிய வரைபடம்

மெல்பேர்ணின் உள் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள், வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மெல்பேர்ண் வாட்டர் இன்று வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட வெள்ள வரைபடம், நூறு...

வெளிநாட்டு தலையீடு இல்லாமல் நாட்டைப் பாதுகாப்போம் – அரசாங்கம்

ஆஸ்திரேலியாவை பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறது. நமது நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தேசிய நலன்களுக்கு வெளிநாட்டு தலையீட்டால் ஏற்படும் அச்சுறுத்தல்கள்...

ஆஸ்திரேலியாவைத் தாக்க இருக்கும் புயல்களுக்கான கவர்ச்சிகரமான பெயர் பட்டியல்

ஆஸ்திரேலியாவின் அடுத்த வெப்பமண்டல புயல்களுக்கான புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நவம்பர் முதல் ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் புயல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக...