Breaking Newsசிட்னி ஷாப்பிங் மாலில் கத்தி குத்து சம்பவத்தில் 4 பேர் பலி

சிட்னி ஷாப்பிங் மாலில் கத்தி குத்து சம்பவத்தில் 4 பேர் பலி

-

சிட்னியின் வெஸ்ட்ஃபீல்ட் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வெஸ்ட்ஃபீல்ட் மாலில் இருந்து மக்கள் ஓடிவருவதைக் காண முடிந்தது, மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பதிவாகியதையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி அப்பகுதிக்குள் நுழைவதைத் தடுத்துள்ளனர்.

நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அந்த பகுதிக்கு மக்கள் வருவதை தவிர்க்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை, தாக்குதல் நடத்தியவர் என நம்பப்படும் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியது.

ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...