சிட்னியின் கிழக்கில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, மக்கள் வெளியேறும்படி கூறப்பட்டுள்ளனர்.
வெஸ்ட்ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பதிவாகியதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பை பலப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகளில் பலர் வெறித்தனமாக மால் மையத்தை விட்டு வெளியேறுவதையும், ஆம்புலன்ஸ்கள் அதன் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டதையும் காட்டுகிறது.
இந்த கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக வெஸ்ட்ஃபீல்டுக்குள் நுழைய முடியாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரு நடவடிக்கை நடந்து வருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை கூறியது, ஆனால் கூடுதல் விவரங்களை வழங்க முடியவில்லை.