Cinemaஉலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில்...

உலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில் மரணம்

-

பிரபல கொரிய பாடகர் பார்க் போ ராம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

30 வயதான இவர் இறப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கடந்த 11ம் திகதி நண்பர்கள் இருவருடன் தனிப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், வீட்டின் குளியலறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், தேடியபோது மயங்கி கிடந்துள்ளார்.

இந்த மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்க் போராமின் திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவரது நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் கே2 போட்டியில் பங்கேற்ற பார்க் போரம், தனது திறமையால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

பின்னர் 2014 இல் “பியூட்டிஃபுல்” பாடலின் வெளியீட்டின் மூலம் பாப் இசை துறையில் நுழைந்தார்.

அப்போதிருந்து அவரது இசை வாழ்க்கையில், போரம் பல விருதுகளை வென்றது மட்டுமல்லாமல், மற்றொரு பாடலை வெளியிடவும் தயாராகி வந்தார்.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

மெல்பேர்ண் வீடொன்றில் கொலைவெறி தாக்குதல்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள ஒரு வீட்டில் மற்றொரு நபர் கொடூரமாக தாக்கப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Cheltenham-இல் உள்ள Warrigal சாலையில் உள்ள ஒரு வீட்டில்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...