Sportsபஞ்சாப்பை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை - IPL 2024

பஞ்சாப்பை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை – IPL 2024

-

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிவந்த ரோகித் சர்மா, 25 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சூர்யகுமார் யாதவ், அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்களான ஹர்திக் 10 ஓட்டங்களிலும், டிம் டேவிட் 14 ஓட்டங்களிலும், சைபர்ட் ஒரு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், திலக் வர்மா அதிரடி காட்ட, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளும், சாம் கரண் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் சாம் கரண் மற்றும் பரப்சிம்ரன் சிங் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இந்த ஜோடியில் பரப்சிம்ரன் சிங் (0) ஓட்டம் ஏதும் எடுக்காதநிலையில் வெளியேறினார். அவரைத்தொடர்து ரூசோவ் 1 ஓட்டங்களிலும், சாம் கரண் 6 ஓட்டங்களிலும், லிவிங்ஸ்டோன் 1 ஓட்டத்துடனும் ஹர்பிரித் சிங் பாட்டியா 13 ஓட்டங்களிலும், ஜிதேஷ் சர்மா 9 ஓட்டங்களிலும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஷாங் சிங் 41 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக அசுடோஷ் சர்மாவுடன், ஹர்பிரித் பிரார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்த அசுடோஷ் சர்மா 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 28 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹர்பிரித் பிரார் 21 ஓட்டங்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரபாடா கடைசி ஓவரில் 8 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் ஹர்ஷல் பட்டேல் 1 ஓட்டத்துடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் கோட்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் மேத்வால், கோபால் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றது.

Latest news

குறைந்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரி வரம்பு

ஆஸ்திரேலியாவின் அதிகம் விற்பனையாகும் சில மின்சார வாகனங்கள், அவற்றின் பேட்டரி வரம்பு குறித்த தவறான தகவல்களுடன் விளம்பரப்படுத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Australian Automobile Association (AAA)...

தேசிய பூங்காக்களுக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க நியூசிலாந்து முடிவு

அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளைத் தேடுவதால், நியூசிலாந்து தனது மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களான Milford Track மற்றும் Mount Cook ஆகியவற்றைப் பார்வையிட...

கோலாக்களைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு

ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் கோலாக்களைப் பாதுகாக்க ஒரு புதிய தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் தென்மேற்கே அமைந்துள்ள லாங் பாயிண்ட் மற்றும் அப்பின் இடையே இதற்காக சுமார்...

ஆஸ்திரேலியர்களுக்கு $300 தடுப்பூசியை இலவசமாக வழங்குமாறு அழுத்தம் 

நாடு முழுவதும் மிகவும் தொற்றும் வைரஸிற்கான வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்களுக்கு $300 மதிப்புள்ள RSV தடுப்பூசியை இலவசமாக்க மத்திய அரசை...

மெல்பேர்ணில் கார் விபத்து – மூவர் படுகாயம்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் நேற்று இரவு இரண்டு கார்கள் மோதிய விபத்தில் ஆறு பேர் காயமடைந்ததை அடுத்து, ஒரு பெண்ணின் கையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது . இரவு 8.40 மணியளவில்...

கோலாக்களைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு

ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் கோலாக்களைப் பாதுகாக்க ஒரு புதிய தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் தென்மேற்கே அமைந்துள்ள லாங் பாயிண்ட் மற்றும் அப்பின் இடையே இதற்காக சுமார்...