ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்காக நோயாளி 21 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது 49 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அறுவைசிகிச்சைகளின் பின்னடைவை நிவர்த்தி செய்வதற்கான தேசிய திட்டத்தில் 4.12 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்படி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, சில துறைகளில் அரசு மருத்துவமனைகளுக்கு போதிய வசதிகள் இல்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, மருத்துவமனை நிதியுதவி ஒப்பந்தத்தில் கணிசமான அளவு நிதியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது, ஆனால் அந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
இனியும் தாமதிக்காமல் அந்த வசதிகளை சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும் என சுகாதார சங்கங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.