Cinemaஇன்ஸ்டாகிராமிலிருந்து விலகியது குறித்து யுவன் விளக்கம்

இன்ஸ்டாகிராமிலிருந்து விலகியது குறித்து யுவன் விளக்கம்

-

வெங்கட் பிரபு விஜயுடன் இணைந்திருக்கும் ‘கோட்’ படத்திலிருந்து ‘விசில் போடு’ பாடல் யுவன் இசையில் கடந்த 14ஆம் திகதி வெளியானது. படத்தில் இருந்து வெளியாகும் முதல் பாடல் என்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், பார்ட்டி தீமில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியது.

யுவன் இசையமைத்த இந்த பாடல் நன்றாக இல்லை என்றும் அவர் ஏன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என பலர் விமர்சிக்கும் சூழ்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைத்துப் பதிவுகளையும் நீக்கபட்டத்துடன் இப்போது அவரின் பக்கமும் இன்ஸ்டாவில் வரவில்லை.

இந்த நிலையில் , தொழில்நுட்பகோளாறு காரணமாக தான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியதாக யுவன் விளக்கம் அளித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்-தள பதிவில்,தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் எனது இன்ஸ்டகிராம் கணக்கு முடங்கியது. எனது குழு இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றனர். விரைவில் வருவேன். என தெரிவித்துள்ளார்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...