Sports67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி - IPL 2024

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா 46 ஓட்டங்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் கிளாசன் முறையே 1 மற்றும் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நிதிஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அகமது சிறப்பாக ஆடினர்.

போட்டி முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களை குவித்தது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு கடினமான ஆரம்பமே கிடைத்தது. அந்த அணியின் ஆரம்ப வீரர்களான பிரித்வி ஷா 16 ஓட்டங்களிலும், டேவிட் வோர்னர் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி 18 பந்துகளில் 65 ஓட்டங்களை குவித்தார். இவருடன் ஆடிய அபிஷேக் பொவெல் 22 பந்துகளில் 42 ஓட்டங்களை குவித்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், ரிஷப் பந்த் நிதானமா ஆடி 44 ஓட்டங்களை குவித்தார். இவரும் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய நசராஜன் 4 விக்கெட்டுகளையும், மயன்க் மார்கண்டே மற்றும் நிதிஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Latest news

மருத்துவக் காப்பீட்டு நிதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

நாட்டில் உள்ள பொது மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டு நிதியின் அளவை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் மருத்துவக்...

முடிவடைந்துள்ள தெற்காசிய நாட்டிற்கான விசா வகைக்கான குலுக்கல்

திறமையான ஆரம்பகால நிபுணர்களுக்கான மொபிலிட்டி ஏற்பாடு திட்டம் (MATES) எனப்படும் ஒரு புதிய முன்னோடித் திட்டம், இந்தியாவைச் சேர்ந்த இளம் நிபுணர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆஸ்திரேலியாவில்...

ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவிற்கு வழங்கப்பட்ட $1.2 பில்லியன்

விக்டோரியா மாநிலத்தில் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தென்மேற்கு விக்டோரியாவில் நெல்சன் மற்றும் போர்ட்லேண்ட் இடையே ஒரு புதிய...

பாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny Wong

புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி...

காலை உணவாக முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

காலை உணவில் முட்டைகளைச் சேர்ப்பது தொடர்பாக மோனாஷ் பல்கலைக்கழகம் ஒரு புதிய கண்டுபிடிப்பை செய்துள்ளது. காலை உணவில் Oats சேர்த்துக் கொள்வது, உயிருக்கு ஆபத்தான இதய நோய்...

Abha & Nagamandala

Dear Rasikas, get ready for an unforgettable evening of rhythm, grace, and energy at Abha & Nagamandala! by world-renowned...