வங்கியில் கடன் வாங்குவதற்காக இறந்தவரை அழைத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரேசிலில் இருந்து வெளியாகியுள்ளது.
கடனை மீட்பதற்காக மாமா எனக் கூறி உயிரிழந்த நபரை சக்கர நாற்காலியில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரியோ டி ஜெனிரோவில் உள்ள இடாவோ வங்கிக் கிளையின் கவுன்டரில் இருந்த பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த முதியவரின் தலையில் கையை வைத்து அவரது கையிலிருந்து பேனாவைப் பறிக்க முயன்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான காணொளி காட்சிகளும் சமூக ஊடகங்களில் அம்பலமாகியுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் 3000 டொலர்களை கடனாகப் பெற முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடன் தொகையை இறந்தவர் பெயரில் தேவை என வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
உத்தரவாததாரர் எந்த பதிலும் அளிக்காததால், வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம் என கூறி ஆம்புலன்சை வரவழைத்து, விசாரணையில், அந்த நபர் இறந்து விட்டது தெரியவந்தது.
குறித்த நபர் சம்பவத்திற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக அம்புலன்ஸ் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரேசில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.