விக்டோரியா மாநிலத்தில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தப்போவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
விக்டோரியாவில் 80க்கும் மேற்பட்ட கடைகள் உரிமம் இல்லாமல் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதாகவும், அத்தகைய கடைகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
சோதனையின் போது, மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு கடை உரிமம் இல்லாமல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தையின் வேலையை உடனடியாக நிறுத்துமாறு வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதே கடையில் உரிமம் இன்றி வேறு ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், இரண்டு முறை குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியதாக கடை மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட கடை மீது ஏழு குற்றங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் எதிர்காலத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் குழந்தை தொழிலாளர் முறை விசாரிக்கப்படும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.