Sports6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய லக்னோ - IPL 2024

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய லக்னோ – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடந்த 39-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின.

அதில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட் , ரகானே ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ரகானே 1 ஓட்டத்திற்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து வந்த டேரில் மிட்சேல் 11 ஓட்டங்களும், ஜடேஜா 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஷிவம் துபே களமிறங்கினார். மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார்.

சிறப்பாக விளையாடிய ருதுராஜ் அரைசதம் அடித்தார். ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் இணைந்து அதிரடி காட்டினார். அரைசதம் கடந்த பிறகு பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் ஷிவம் துபே 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 211 ஓட்டங்கள் எடுத்து எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் சார்பில் குயிண்டன் டி கோக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் டி கோக் வந்த வேகத்தில் (0) டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து கே.எல்.ராகுல் 16 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டோய்னிஸ் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

அடுத்ததாக மார்கஸ் ஸ்டோய்னிசுடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடியில் நிகோலஸ் பூரன் 34 (15) ஓட்டங்களுக்கு பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்டோய்னிஸ் 56 பந்துகளில் ஐ.பி.எல். தொடரின் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

முடிவில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 124 (63) ஓட்டங்களும், தீபக் ஹூடா 17 (6) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரானா 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ரகுமான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...