Sports35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி - IPL...

35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற 41-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஊதில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் போப் டு பிளசிஸ் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 48 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டு பிளசிஸ் 12 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜாக்ஸ் 6 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறக்கிய ரஜத் படிதார் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். விராட் கோலி மற்றும் படிதார் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 37 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் 1 ஓட்டத்துடன் பிடிகொடுத்து ஐதராபாத் அணியின் ரசிகர்கள்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா 31 ஓட்டங்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் 7 ஓட்டங்களும், ஹென்ரிச் கிளாசென் 7 ஓட்டங்களும், நிதிஷ் ரெட்டி 13 ஓட்டங்களும், அப்துல் சமத் 10 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பெங்களூரு அணியினரின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் திணறினர்.

அடுத்ததாக ஷபாஸ் அகமதுவுடன், பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்த பேட் கம்மின்ஸ் 31 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதிவரை போராடிய ஷபாஸ் அகமது 40 (37) ஓட்டங்களும், உனத் கட் 8 (10) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய கேமரூன் கிரீன், சுவப்நில் சிங் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ், யாஸ் தயாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

ஆஸ்திரேலியாவில் சமீபத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 சட்டவிரோத மருந்துகள்

புதிய கழிவு நீர் சோதனைகளின்படி, ஆஸ்திரேலியாவில் நான்கு சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையத்தின் (ACIC) சமீபத்திய அறிக்கை, ஆகஸ்ட் 2023...

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி

ஆஸ்திரேலிய அரசாங்கம் மின்சார வாகன (EV) உரிமையாளர்கள் மீது சாலை பயனர் கட்டணம் விதிக்க ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. தனியார் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் எரிபொருள்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

சமூக ஊடகங்களில் துப்பாக்கிச் சூடு மிரட்டல் – WA பள்ளியை முற்றுகையிட்ட போலீசார்

சமூக ஊடகங்களில் துப்பாக்கிச் சூடு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, பெர்த்தின் மிகப்பெரிய உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்றை நேற்று போலீசார் முற்றுகையிட்டனர். Mount Lawley Senior உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஒரு டீனேஜரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ...

திடீரென விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானம் – பீதியடைந்த பயணிகள்

சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் செல்லும் விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கேபினில் அழுத்தம் குறைந்ததால், பயணிகள் பீதியடைந்ததாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஸ்கைநியூஸ்...